ரஜினியின் ‘கூலி’ செப்.11 ஓடிடியில் ரிலீஸ்!

ரஜினியின் ‘கூலி’ செப்.11 ஓடிடியில் ரிலீஸ்!
Updated on
1 min read

ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ திரைப்படம் வரும் செப்.11 அன்று ஓடிடியில் வெளியாகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 14 அன்று திரையரங்குகளில் வெளியானது. இந்த ஆண்டின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமாக வெளியான இது, கலவையான விமர்சனங்களையே பெற்றது. எனினும் இதுவரை இப்படம் ரூ.500 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. 1000 கோடி ரூபாய் வரை வசூல் செய்யும் என்று படக்குழுவினர் எதிர்பார்த்தார்கள். தமிழகத்தில் ரூ.70 கோடி அளவுக்கு இப்படம் வசூலித்துள்ளது.

இப்படத்தில் சவுபின் சாஹிர், ஸ்ருதிஹாசன், நாகர்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் இப்படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அமேசான் ப்ரைம் வீடியோவில் இப்படம் வரும் செப்.11 அன்று வெளியாகும் என ப்ரைம் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

get ready to vibe with the saga of Deva, Simon, and Dahaa #CoolieOnPrime, Sep 11@rajinikanth @sunpictures @Dir_Lokesh @anirudhofficial #AamirKhan @iamnagarjuna @nimmaupendra #SathyaRaj #SoubinShahir @shrutihaasan @hegdepooja pic.twitter.com/Erjtef2o0C

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in