

கமல் நடித்துள்ள ‘தக் லைஃப்’ திரைப்படம் திடீரென்று எவ்வித அறிவிப்பும் இன்றி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான படம் ‘தக் லைஃப்’. மிகவும் எதிர்பார்ப்புடன் வெளியாகி, படுதோல்வியை தழுவியது. இந்தத் தோல்வியினால் 8 வாரங்கள் கழித்து ஓடிடி வெளியீடு என்ற ஒப்பந்தத்தினை மாற்றி, 4 வாரங்கள் கழித்து வெளியிட்டுள்ளது படக்குழு. திடீரென்று எவ்வித அறிவிப்பும் இன்றி வெளியாகியுள்ளது ‘தக் லைஃப்’.
மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, த்ரிஷா, அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி, அசோக் செல்வன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘தக் லைஃப்’. இப்படத்தினை ராஜ்கமல் நிறுவனம், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருந்தன. இதன் ஒளிப்பதிவாளராக ரவி.கே.சந்திரன், இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் பணிபுரிந்திருந்தனர்.
இப்படத்தினை அனைத்து மொழிகளிலுமே பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்தியது படக்குழு. அனைத்து மொழிகளிலுமே ‘தக் லைஃப்’ படத்துக்கு எந்தவொரு வரவேற்பும் கிடைக்கவில்லை. இதன் ஒளிப்பதிவு மட்டுமே ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டது. மீதி அனைத்துமே கடும் விமர்சனங்களை சந்தித்தது நினைவுகூரத்தக்கது.