

‘தக் லைஃப்’ படத்துக்கு ஓடிடி நிறுவனத்தால் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் இதர படக்குழுவினர் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.
மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, த்ரிஷா நடிப்பில் வெளியான படம் ‘தக் லைஃப்’. பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியாகி தோல்வியை தழுவியது. இதனை விளம்பரப்படுத்த பல கோடிகளை செலவு செய்தது படக்குழு. அந்தளவுக்கு படத்தின் வசூல் இந்தியளவில் எந்தவொரு மொழியிலுமே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
‘தக் லைஃப்’ படத்தின் ஓடிடி உரிமையினை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் 130 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்தது. தற்போது படத்தின் தோல்வியால், ஒப்புக் கொண்ட தொகையினை குறைக்க முடிவு செய்திருக்கிறது. 20-25 சதவீதம் குறைக்க முடிவு செய்திருப்பதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் இதர படக்குழுவினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. ஏனென்றால் இந்த முறையே தங்களுடைய படத்துக்கும் வந்துவிடுமோ என்ற அச்சத்தில் இருக்கிறார்கள்.