ஓடிடியில் ‘நிறம் மாறும் உலகில்' ஏப்.25-ல் ரிலீஸ்

ஓடிடியில் ‘நிறம் மாறும் உலகில்' ஏப்.25-ல் ரிலீஸ்
Updated on
1 min read

ஏப்ரல் 25-ம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது ‘நிறம் மாறும் உலகில்’ திரைப்படம்.

பிரிட்டோ இயக்கத்தில் மார்ச் 7-ம் தேதி வெளியான படம் ‘நிறம் மாறும் உலகில்’. இப்படம் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை. தற்போது இப்படம் ஏப்ரல் 25-ம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் வித்தியாசமான போஸ்டர் வடிவமைப்பு, ட்ரெய்லர் என்று வெளியானாலும், மக்கள் மத்தியில் இப்படத்துக்கு வரவேற்பு கிடைக்கவில்லை.

பாரதிராஜா, ரியோ ராஜ், நட்டி, சாண்டி, யோகி பாபு, ஆர்.ஜே.விக்னேஷ்காந்த், ரிஷிகாந்த், கனிகா, வடிவுக்கரசி, விஜி சந்திரசேகர் என ஒரு நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தது. 4 கதைகள் கொண்ட ஆந்தாலஜி பாணியில் இப்படம் உருவாக்கப்பட்டது. தற்போது ஓடிடியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறது படக்குழு.

April 25 mudhal, Ulagam Niram Maarum!

"Niram Marum Ulagil" streaming from April 25 on Sun NXT

[Britto JB, Bharathiraja, Rio Raj, Natty Subramaniam, Sandy Master, Yogi Babu, RJ Vigneshkanth, Rishikanth, Aegan, Kaniha, Vadivukkarasi, Viji Chandrasekhar, Aadukalam Naren, Mime… pic.twitter.com/OtqQPXt5ml

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in