பா.ரஞ்சித் தயாரிக்கும் தமிழ் சீரிஸில் ஜான்வி கபூர்!

பா.ரஞ்சித் தயாரிக்கும் தமிழ் சீரிஸில் ஜான்வி கபூர்!

Published on

பா.இரஞ்சித் தயாரிக்கவுள்ள வெப் தொடரில் ஜான்வி கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் பல்வேறு வெப் தொடர்களை தயாரித்து வருகிறது. தற்போது தமிழில் புதிய வெப் தொடரை தயாரிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறது. இதனை பா.ரஞ்சித் தயாரித்து, நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்திற்கு கொடுக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இதற்கான முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த தொடரை ‘களவாணி’ படத்தினை இயக்கிய சற்குணம் இயக்கவுள்ளார். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஜான்வி கபூர் சம்மதம் தெரிவித்துள்ளார். தென்னிந்திய திரையுலகில் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியான ‘தேவாரா’ மூலம் அறிமுகமானார் ஜான்வி கபூர். அப்படம் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை. அதனைத் தொடர்ந்து ராம்சரண் நடித்து வரும் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.

தமிழில் அவருடைய நடிப்பில் உருவாகும் முதல் வெப் தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் எந்தவொரு படத்திலும் நடிக்க இதுவரை நடிக்க ஜான்வி கபூர் சம்மதம் தெரிவிக்கவில்லை. முதன் முறையாக வெப் தொடருக்கு சம்மதம் தெரிவித்திருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in