சமுத்திரக்கனியின் ‘திரு மாணிக்கம்’ ஜன.24-ல் ஓடிடியில் ரிலீஸ்!

சமுத்திரக்கனியின் ‘திரு மாணிக்கம்’ ஜன.24-ல் ஓடிடியில் ரிலீஸ்!
Updated on
1 min read

நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி, அனன்யா, தம்பி ராமையா உட்பட பலர் நடித்துள்ள படம், ‘திரு மாணிக்கம்’. சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு விஷால் சந்திரசேகர் இசை அமைத்துள்ளார். இதில் பாரதிராஜா முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்.

இப்படம் கடந்த டிசம்பரில் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இப்படத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருந்த பதிவில், “இது மிக அற்புதமான படைப்பு. இப்படத்தின் ஆழமும், உணர்வுகளும் படம் முடிந்த பின்னும் நம்மை விட்டு அகலவில்லை. இயக்குநர் நந்தா பெரியசாமிக்கு தமிழ்த் திரையுலகில் மிகப்பெரிய எதிர்காலம் இருக்கிறது” என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் இப்படம் வரும் ஜன.24 அன்று ஜீ5 ஓடிடி தளத்தில் தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in