சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ டிச.5-ல் ஓடிடியில் ரிலீஸ்!

சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ டிச.5-ல் ஓடிடியில் ரிலீஸ்!
Updated on
1 min read

சென்னை: சிவகார்த்திகேயன் நடித்துள்ள ’அமரன்’ திரைப்படம் டிசம்பர் 5-ம் தேதி ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள ‘அமரன்’ படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். இதில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களை தவிர்த்து, ராகுல் போஸ், புவன் அரோரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரித்த இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். படம் தீபாவளியை முன்னிட்டு கடந்த அக்டோபர் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்துள்ளது. படத்தின் பட்ஜெட் ரூ.150 கோடி என கூறப்படுகிறது. சிவகார்த்திகேயனின் திரைப் பயணத்தில் அதிகபட்ச வசூலை ஈட்டிய படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. மறுபுறம் காஷ்மீர் மக்களை தவறாக சித்தரித்ததாகவும் சர்ச்சை எழுந்தது. இந்நிலையில், இந்தப் படம் வரும் டிசம்பர் 5-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியாக உள்ளது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட மொழிகளிலும் படத்தை காண முடியும்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in