கீர்த்தி சுரேஷின் ‘ரகு தாத்தா’ செப்.13-ல் ஓடிடியில் ரிலீஸ்!

கீர்த்தி சுரேஷின் ‘ரகு தாத்தா’ செப்.13-ல் ஓடிடியில் ரிலீஸ்!
Updated on
1 min read

சென்னை: கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘ரகு தாத்தா’ திரைப்படம் வரும் செப்டம்பர் 13-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

‘கேஜிஎஃப்’, ‘காந்தாரா’ உள்ளிட்ட படங்களை தயாரித்த ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம் நேரடியாக தமிழில் முதன்முறையாக தயாரித்துள்ள படம் ‘ரகு தாத்தா’. பெரும் வரவேற்பை பெற்ற ‘தி ஃபேமிலி மேன்’ வெப் தொடருக்கு கதை எழுதிய சுமன் குமார் இப்படத்தை இயக்கியுள்ளார். இதில் நடிகை கீர்த்தி சுரேஷ் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் எம்.எஸ்.பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், ஆனந்த்சாமி, ராஜேஷ் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஒய் யாமினி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில் இப்படம் வரும் செப்டம்பர் 13-ம் தேதி ஜீ5 ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in