வசந்தபாலனின் ‘தலைமைச் செயலகம்’

வசந்தபாலனின் ‘தலைமைச் செயலகம்’
Updated on
1 min read

சென்னை: ராதிகா சரத்குமாரின் ராடன் மீடியா வொர்க்ஸ் தயாரித்துள்ள வெப் தொடர், 'தலைமைச் செயலகம்'. வசந்தபாலன் இயக்கியுள்ள இதில் கிஷோர், ஸ்ரேயா ரெட்டி, ஆதித்யா மேனன், பரத் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். எட்டு எபிசோடுகளாக உருவாகியுள்ள இந்த சீரிஸ் வரும் 17-ம் தேதி முதல், ஜீ5 தளத்தில் வெளியாக இருக்கிறது. இது தமிழ்நாட்டின் அரசியல் களப் பின்னணியில் லட்சியம், துரோகம், போராட்டம் மிகுந்த பெண்ணின் அதிகார வேட்கையின் கதையைச் சொல்கிறது.

இயக்குநர் வசந்தபாலன் கூறும்போது, "அரசியல் அரங்கில், உலக விதிகள் எதுவும் பொருந்தாது. சுயாட்சி, மாநில தன்னிறைவு மற்றும் மக்கள் உரிமைகள் போன்றவற்றில், ஊழல், ஊழலின் ஆபத்துகள், ஜனநாயகப் போராட்டத்தின் சமரசங்கள் போன்றவற்றால் கறைபடிந்த அரசாக, தன் மாநில மக்களின் நலனைக் காக்கும் அரசைப் பார்க்கும் முயற்சிதான் தலைமைச் செயலகம். ஒரு மாநில முதல்வரின் பார்வையில் ஆயுதப்போராட்டங்களின் ஆபத்துக்களைப் பற்றி இந்தக்கதைப் பேசுகிறது" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in