

இந்த வாரம் திரையரங்குகள், ஓடிடி மற்றும் திரையரங்குகளுக்குப் பிறகு ஓடிடியில் ரிலீஸாகும் படங்கள் குறித்து பார்ப்போம்.
தியேட்டர் ரிலீஸ்: விஷ்ணு விஷால், விக்ராந்த் நடித்துள்ள ‘லால் சலாம்’, மணிகண்டனின் ‘லவ்வர்’, ராகினி திவேதியின் ‘ஈமெயில்’ ஆகிய தமிழ்ப் படங்கள் நாளை (பிப்.9) திரையரங்குகளில் வெளியாகின்றன. மம்மூட்டி, ஜீவாவின் ‘யாத்ரா 2’ தெலுங்கு படம் இன்று வெளியாகியுள்ளது.
ரவிதேஜாவின் ‘ஈகிள்’ தெலுங்கு படத்தை வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் காணலாம். டோவினோ தாமஸின் ‘அன்வேஷிப்பின் கண்டேதும்’ (Anweshippin Kandethum), புதுமுகங்கள் நடித்துள்ள ‘பிரமேலு’ மலையாள படங்களை திரையரங்குகளில் நாளை காண முடியும். ஷாயித் கபூரின் ‘தேரி பாத்தோன் மே ஏசா உல்ஜா ஜியா’ (Teri Baaton Mein Aisa Uljha Jiya) இந்தி படம் நாளை வெளியிடப்பட உள்ளது.
நேரடி ஓடிடி ரிலீஸ்: பரத், ஜனனி நடித்துள்ள ‘இப்படிக்கு காதல்’ திரைப்படம் ஆஹா ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது. பூமி பெட்னேகரின் ‘பக்ஷக்’ (Bhakshak) இந்திப் படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் நாளை காணக் கிடைக்கும்.
திரையரங்குகளுக்கு பிறகான ஓடிடி ரிலீஸ்: தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ அமேசான் ப்ரைம் ஓடிடியிலும், சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ சன்நெக்ஸ்ட் ஓடிடியிலும், மகேஷ்பாபுவின் ‘குண்டூர் காரம்’ நெட்ஃப்ளிக்ஸிலும் வெள்ளிக்கிழமை வெளியாகிறது. ப்ரி லார்சனின் ‘தி மார்வல்ஸ்’ ஹாட்ஸ்டார் ஓடிடியில் தற்போது காணக் கிடைக்கிறது. கார்ட்டர் ஸ்மித்தின் ‘தி பாசஞ்சர்’ படம் ஹாலிவுட் படத்தை ப்ரைம் ஓடிடியில் தற்போது காண முடியும்.
இணைய தொடர்கள்: சைஜு குருப்பின் ‘ஜெய் மஹேந்திரன்’ வெப்சீரிஸ் சோனி லிவ் ஓடிடியில் நாளை காணக் கிடைக்கும்.