Published : 01 Feb 2024 08:05 PM
Last Updated : 01 Feb 2024 08:05 PM

மீரா ஜாஸ்மின், நரேனின் ‘குயின் எலிசபெத்’ பிப்.14-ல் ஓடிடியில் ரிலீஸ்!

சென்னை: மீரா ஜாஸ்மின் நடித்துள்ள ‘குயின் எலிசபெத்’ பிப்ரவரி 14-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மலையாளத்தில் வெளியான ‘ஜோசப்’ படம் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் இயக்குநர் எம்.பத்மகுமார். இவர் இயக்கத்தில் நரேன், மீரா ஜாஸ்மின் நடிப்பில் கடந்த டிசம்பர் 29-ம் தேதி திரையரங்குகளில் வெளியான மலையாளப்படம் ‘குயின் எலிசபெத்’. ரஞ்சித் ராஜ் இசையமைத்துள்ள இப்படத்தில் ஜூட் ஆந்தனி ஜோசப், ஸ்வேதா மேனன், ஜானி ஆண்டனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீரா ஜாஸ்மின் ‘மகள்’ மலையாளப்படத்தில் நடித்தார். அதைத் தொடர்ந்து எதிர்பார்ப்புகளுடன் இப்படம் வெளியானது. பேமிலி காமெடி ட்ராமாவாக உருவான இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில் படம் வரும் பிப்ரவரி 14-ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x