‘சித்தா’ முதல் ‘கண்ணூர் ஸ்குவாட்’ வரை - ஓடிடியில் இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

‘சித்தா’ முதல் ‘கண்ணூர் ஸ்குவாட்’ வரை - ஓடிடியில் இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

Published on

இந்த வாரம் திரையரங்குகள், ஓடிடி மற்றும் திரையரங்குகளுக்குப் பிறகு ஓடிடியில் ரிலீஸாகும் படங்கள் குறித்து பார்ப்போம். தியேட்டர் ரிலீஸ்: யாஷிகா ஆனந்த் நடித்துள்ள ‘சைத்ரா’ திரைப்படம் நாளை (நவ.17) திரையரங்குகளில் வெளியாகிறது. தவிர, கல்யாணி பிரியதர்ஷனின் ‘சேஷம் மைக்-ல் பாத்திமா’ மலையாள படமும், ரக்‌ஷித் ஷெட்டியின் ‘சப்த சாகரடாச்சே எல்லோ - சைடு பி’ (Sapta Sagaradaache Ello - Side B) கன்னட படமும் நாளை திரையரங்குகளில் வெளியாகின்றன.

நேரடி ஓடிடி ரிலீஸ்: நிகில் நாகேஷ் பட் இயக்கியுள்ள ‘அபூர்வா’ இந்திப் படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியிடப்பட்டு தற்போது காணக் கிடைக்கிறது. கிறிஸ் ராக்கின் ‘ரஸ்டின்’ ஹாலிவுட் படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் நாளை வெளியிடப்பட உள்ளது.

திரையரங்குகளுக்கு பிறகான ஓடிடி ரிலீஸ்: சித்தார்த் நடித்துள்ள ‘சித்தா’ தமிழ் படமும், மம்மூட்டியின் ‘கண்ணூர் ஸ்குவாட்’ மலையாள படமும் நாளை ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாக உள்ளது. சிவ ராஜ்குமாரின் ‘கோஸ்ட்’ கன்னட படம் ஜீ5 ஓடிடி தளத்தில் நாளை காணக்கிடைக்கும். வெற்றி நடித்துள்ள ‘ஜோதி’ திரைப்படம் ஆஹா ஓடிடியில் வெள்ளிக்கிழமை வெளியாகிறது. அர்ஜூன் அசோகனின் ‘தீப்பொறி பென்னி’ (Theeppori Benny) மலையாள படம் அமேசான் ப்ரைமில் நாளை வெளியிடப்பட்ட உள்ளது. | இணையதள தொடர்: மாதவன் நடித்துள்ள ‘தி ரயில்வே மென்’ இந்தி வெப்சீரிஸ் நாளை நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in