Published : 09 Nov 2023 05:27 PM
Last Updated : 09 Nov 2023 05:27 PM

ஜப்பான்’ முதல் ‘லேபில்’ வரை - தியேட்டர், ஓடிடியில் இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

இந்த வாரம் திரையரங்குகள், ஓடிடி மற்றும் திரையரங்குகளுக்குப் பிறகு ஓடிடியில் ரிலீஸான படங்கள் குறித்து பார்ப்போம்.

தியேட்டர் ரிலீஸ்: ராஜுமுருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ‘ஜப்பான்’ திரைப்படமும், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படமும் நாளை (நவ.10) திரையரங்குகளில் வெளியாகிறது. விக்ரம் பிரபுவின் ‘ரெய்டு’ படத்தை நாளை திரையரங்குகளில் காணலாம். ரா.வெங்கட் இயக்கத்தில் உருவாகியுள்ள கிடா திரைப்படம் நவம்பர் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது. இது தவிர்த்து, சல்மான்கானின் ‘டைகர்3’ நவம்பர் 12-ம் தேதியும், திலீப், தமன்னா நடித்துள்ள ‘பந்த்ரா’ (Bandra) மலையாள படம் வெள்ளிக்கிழமையும் வெளியாகிறது. நியா டகோஸ்டா இயக்கிய்யுள்ள ‘தி மார்வல்ஸ்’ ஹாலிவுட் படத்தை நாளை திரையரங்குகளில் காணலாம்.

நேரடி ஓடிடி ரிலீஸ்: ராஜா கிருஷ்ண மேனன் இயக்கத்தில் இஷான் கட்டார், மிருணாள் தாக்கூர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தி படம் ‘பிப்பா’ (PIPPA) திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெள்ளிக்கிழமை நேரடியாக வெளியிடப்பட உள்ளது.

திரையரங்குகளுக்கு பிறகான ஓடிடி ரிலீஸ்: விக்ரம் பிரபு, ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ள இறுகப்பற்று திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் தற்போது காணக்கிடைக்கிறது. த்ரிஷா நடிப்பில் உருவான ‘தி ரோட்’ படத்தை ஆஹா ஓடிடி தளத்தில் நாளை காணலாம். முத்தையா இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்த ‘புலிக்குத்தி பாண்டி’ அமேசான் ப்ரைமிலும், அபிஷேக் பச்சனின் ‘கூமர்’ இந்தி படம் ஜீ5 தளத்தில் நாளை வெளியாகிறது. டேவிட் ஃபின்சரின் ‘தி கில்லர்’ ஹாலிவுட் படத்தை நெட்ஃப்ளிக்ஸில் நாளை பார்க்கலாம். சிநேகா, வெங்கட்பிரபு நடித்துள்ள ‘ஷாட்புட் த்ரீ’ அமேசான் ப்ரைமில் காணக்கிடைக்கிறது.

இணையதள தொடர்: அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஜெய் நடித்துள்ள ‘லேபில்’ இணைய தொடர் நாளை (நவ.10) டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x