

சென்னை: முத்தையா இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான ‘புலிக்குத்தி பாண்டி’ திரைப்படம் நவம்பர் 10-ம் தேதி ஓடிடியில் வெளியாகிறது.
முத்தையா இயக்கத்தில் விக்ரம் பிரபு, லக்ஷ்மி மேனன் நடிப்பில் உருவான படம் ‘புலிக்குத்தி பாண்டி’. கலாநிதிமாறன், முத்தையா இருவரும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில், சமுத்திரகனி, சிங்கம் புலி, ஆர்.கே.சுரேஷ், வேல ராமமூர்த்தி, மாரிமுத்து உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
என்.ஆர்.ரகுநந்தன் படத்துக்கு இசையமைத்திருந்தார். கடந்த 2021-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சன் டிவியில் நேரடியாக இப்படம் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அப்போது டிஆர்பி ரேட்டிங்கில் அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட்ட படம் என்ற சாதனையை படைத்தது. அதன்பிறகு படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்நிலையில், தற்போது படம் வரும் நவம்பர் 10-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்திலும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.