‘சந்திரமுகி 2’ முதல் ‘எல்ஜிஎம்’ வரை - தியேட்டர், ஓடிடியில் இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

‘சந்திரமுகி 2’ முதல் ‘எல்ஜிஎம்’ வரை - தியேட்டர், ஓடிடியில் இந்த வாரம் என்ன பார்க்கலாம்?
Updated on
1 min read

இந்த வாரம் திரையரங்குகள், ஓடிடி மற்றும் திரையரங்குகளுக்குப் பிறகு ஓடிடியில் ரிலீஸாகும் படங்கள் குறித்து பார்ப்போம்.

தியேட்டர் ரிலீஸ்: விடுமுறை தினத்தை முன்னிட்டு இந்த வாரம் முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகியுள்ளன. அந்த வகையில் ராகவா லாரன்ஸின் ‘சந்திரமுகி 2’, ஜெயம் ரவியின் ‘இறைவன்’, சித்தார்த்தின் ‘சித்தா’ படங்கள் திரையரங்குகளில் வெளியாகி திரையிடபட்டுக்கொண்டிருக்கின்றன. இதை தவிர்த்து, ராம் பொத்தினேனியின் ‘ஸ்கந்தா’ (Skanda) தெலுங்கு படமும், மம்மூட்டியின் ‘கண்ணூர் ஸ்குவாட்’ வெளியாகியுள்ளது. புல்கிட் சாம்ராட் நடித்துள்ள ‘Fukrey’, விவேக் அக்னிஹோத்ரியின் ‘வேக்கின் வார்’ (The Vaccine War) இந்திப்படமும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது.

திரையரங்குகளுக்கு பிறகான ஓடிடி ரிலீஸ்: சினிமா ரசிகர்களுக்கு விடுமுறை தினத்தை முன்னிட்டு ஓடிடியிலும் இந்த வாரம் நிறைய படங்கள் வெளியாக உள்ளன. விஜய் தேவரகொண்டா - சமந்தாவின் ‘குஷி’ அக்டோபர் 1-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியாகிறது. துல்கர் சல்மானின் ‘கிங் ஆஃப் கொத்தா’ ஹாட்ஸ்டார் தளத்தில் நாளை (செப்.29) வெளியாகிறது.

ஜி.வி.பிரகாஷின் ‘அடியே’ படத்தை சோனி லிவ் தளத்தில் நாளை காணலாம். ‘ஹர்கரா’ ஆஹாவில் அக்டோபர் 1-ம் தேதி வெளியாகிறது. சந்தானத்தின் ‘கிக்’ ஹாட்ஸ்டாரிலும், மலையாள படமான ‘ஆர்டிஎக்ஸ்’ நெட்ஃப்ளிக்ஸிலும் தற்போது காணக்கிடைக்கிறது. ஹரிஷ் கல்யாண், இவானா நடிப்பில் கடந்த ஜூலை மாதம் வெளியான ‘லெட்ஸ் கெட் மேரிட்’ திரைப்படம் இன்று பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

இணைய தொடர்கள்: கோம்தேஷ் இயக்கத்தில் நித்யாமேனன் நடித்திருக்கும் தெலுங்கு சீரிஸ் ‘குமாரி ஸ்ரீமதி’ (Kumari Srimathi) தொடர் அமேசான் ப்ரைம் தளத்தில் காணக்கிடைக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in