Published : 27 Sep 2023 06:07 PM
Last Updated : 27 Sep 2023 06:07 PM

சந்தானத்தின் ‘கிக்’ வியாழக்கிழமை ஓடிடியில் ரிலீஸ்

சந்தானம் நடிப்பில் உருவான ‘கிக்’ திரைப்படம் நாளை (செப்டம்பர் 28) ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் கடந்த செப்டம்பர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘கிக்’. நவீன் ராஜ் படத்தை தயாரித்திருந்தார். தான்யா ஹோம், தம்பி ராமையா, செந்தில், கோவை சரளா, மன்சூர் அலிகான், மனோபாலா, ஓய்.ஜி.மகேந்திரன், வையாபுரி, கூல் சுரேஷ் என நகைச்சுவை பட்டாளம் நடித்திருந்த இப்படத்துக்கு அர்ஜூன் இசையைமதுள்ளார்.

ரொமான்டிக் காமெடி ஜானரில் உருவான இப்படம் பலவீனமான திரைக்கதையால் ரசிகர்களிடையே எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. சந்தானத்தின் ‘டிடிரிட்டர்ன்ஸ்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு வெளியான ‘கிக்’ வசூல் மற்றும் விமர்சன ரீதியாக தோல்வியைத் தழுவியது.

இந்நிலையில், இப்படம் வியாழக்கிழமை டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தை தமிழ், கன்னடம், மலையாள மொழிகளில் காண முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x