Published : 23 Sep 2023 02:45 PM
Last Updated : 23 Sep 2023 02:45 PM

ஷேன் நிகாமின் ‘ஆர்டிஎக்ஸ்’ செப்.24-ல் ஓடிடியில் ரிலீஸ் 

ஷேன் நிகாம் நடித்துள்ள மலையாள திரைப்படமான ‘RDX: Robert Dony Xavier’ ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில் ஷேன் நிகாம், ஆண்டனி வர்கீஸ், நீரஜ் மாதவ் மூவரும் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘RDX’. லால், பாபு ஆண்டனி, மஹிமா நம்பியார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். வீக் என்ட் ப்ளாக் பஸ்டர் நிறுவனம் தயாரித்திருந்த இப்படம் கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் ரூ.8 கோடி பட்ஜெட்டில் உருவானது. மலையாள சினிமாவில் குறைந்த பட்ஜெட்டில் அதிக வசூலை ஈட்டிய படங்கள் வரிசையில் இந்தப் படமும் சேர்ந்துள்ளது. ரூ.8 கோடி பட்ஜெட்டில் ரூ.84 கோடி வரை வசூலாகி மிரட்டியுள்ளது. இந்நிலையில், இப்படம் நாளை (செப்டம்பர் 24-ம் தேதி) நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்டிஎக்ஸ் ட்ரெய்லர்:

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x