Published : 28 Jun 2023 12:42 PM
Last Updated : 28 Jun 2023 12:42 PM

ஐஸ்வர்யா ராஜேஷின் ‘ஃபர்ஹானா’ ஜூலை 7 ஓடிடியில் ரிலீஸ்

சென்னை: ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான ‘ஃபர்ஹானா’ திரைப்படம் வரும் ஜூலை 7ஆம் தேதி சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த படம் ‘ஃபர்ஹானா’. இதில் இயக்குநர் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், கிட்டி, அனுமோல் மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த மே 12 அன்று திரையரங்குகளில் வெளியானது.

இப்படத்தின் ட்ரெய்லர் வெளியானபோது இதில் இஸ்லாமியர்களை தவறாக சித்தரித்துள்ளதாக கூறி இப்படத்துக்கு எதிராக பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் போர்க்கொடி தூக்கின. படம் ரிலீசானபிறகு படத்தில் அப்படியாக காட்சிகள் எதுவும் இல்லையெனக் கூறி தங்கள் எதிர்ப்பை அந்த அமைப்புகள் வாபஸ் பெற்றன.

இந்தச் சூழலில் ‘ஃபர்ஹானா’ திரைப்படம் வரும் ஜூலை 7ஆம் தேதி அன்று சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x