ஆந்திர தலைநகர் நிர்மாண விழா: கருணாநிதி வாழ்த்து

ஆந்திர தலைநகர் நிர்மாண விழா: கருணாநிதி வாழ்த்து
Updated on
1 min read

ஆந்திராவின் புதிய தலைநகர் அமரவாதியின் நிர்மாண விழா வெற்றி பெற வாழ்த்துவதாக அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு திமுக தலைவர் கருணாநிதி கடிதம் அனுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

ஆந்திர மாநில தலைநகரான அமராவதியின் நிர்மாண விழாவில் பங்கேற்க வேண்டி தாங்கள் அனுப்பிய கடிதம் கண்டு மகிழ்ச்சியடைந்தேன். உங்களின் கனவு நகரமாக அமராவதி திகழும். உங்களது கனவுகளை நிறைவேற்றுவதற்கான அத்தனை நிபுணத்துவத்தையும் நீங்கள் பெற்றுள்ளீர்கள். அமராவதி விரைவிலேயே தலைசிறந்த நகரமாக உருப்பெற்று சூரிய ஒளியை காணும் என்று உறுதியாக கூறுகிறேன்.

அமராவதியின் நிர்மாணத்துக்காக பிரதமர் நரேந்திர மோடி வரும் 22-ம் தேதி அடிக்கல் நாட்டவுள்ளார். ஆந்திர மக்கள் தங்கள் வாழ்க்கையில் அனைத்து மேன்மைகளையும் பெறவும், நிர்மாண விழா பெரும் வெற்றியை பெறவும் வாழ்த்துகிறேன்.

இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in