

கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆக.11-ல் தொடக்கம்
இந்தியாவில் ராஜேந்திர சோழன் போரிட்டு வென்ற இடங்கள் குறித்து ஆவணத் திரட்டு தயாரிக் கும் நோக்கில் தொல்லியல், கல்வெட்டுத் துறை வல்லுநர்கள் குழுவினர் சிறப்பு பயணம் மேற்கொள்ள உள்ளனர்.
சாளுக்கி யம் முதல் வங்கம் வரை சுமார் 3,500 கி.மீ. தொலைவுக்கு அவர் கள் பயணம் செல்கின்றனர். ராஜேந்திர சோழன் பிறந்த தினமான ஆடி திருவாதிரை நாள் வரும் ஆகஸ்ட் 11-ம் தேதி வருகிறது. அன்றைய தினம் கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனுக்கு பிறந்தநாள் விழா எடுக்கப்படுகிறது. இதன் முக்கிய நிகழ்வாக, ராஜேந்திர சோழன் படைசெலுத்தி வென்ற இடங்களைத் தேடி வல்லுநர் குழு தனது சிறப்புப் பயணத்தைத் தொடங்குகிறது.
ஓய்வுபெற்ற கல்வெட்டுத் துறை இயக்குநர் முனைவர் வெங்கடேசன் தலைமை யில் தொல்லியல் மற்றும் கல்வெட்டுத் துறை வல்லுநர்கள், ஆர்வலர்கள் அடங்கிய 12 பேர் குழு 3 கட்டங்களாக இப்பயணத்தை மேற்கொள்ள உள்ளது. இதுகுறித்து கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுமத்தின் தலைவர் பொறியாளர் கோமகன் ‘தி இந்து’விடம் கூறியதாவது: சாளுக்கியத்தில் இருந்து வங்கம் வரை பல்வேறு சாம்ராஜ்யங் களை வெற்றிகொண்டவன் ராஜேந்திரசோழன். ஆனால், அவன் படையெடுத்து வென்ற இடங்களைஆய்வு செய்து இதுவரை ஆவணத் திரட்டு எதுவும் தயாரிக்கப்படவில்லை.
அதற்காக யாரும் முனைப்பு காட்டவும் இல்லை. அப்படியொரு ஆவ ணத்தை உருவாக்குவதுதான் எங்கள் பயணத்தின் நோக்கம். சுமார் 40 நாள் பயணம் இது. 3,500 கி.மீ. தொலைவு வரை செல்கிறோம். கங்கைகொண்ட சோழபுரம் - சாளுக்கியம், சாளுக் கியம் - கலிங்கம், கலிங்கம் - மேற்கு வங்கம் (கங்கை) என 3 கட்டங் களாக பயணம் செய்ய திட்டமிட் டுள்ளோம். இந்த வழிநெடுகிலும் ராஜேந்திர சோழன் குறித்த ஆவ ணங்கள், கல்வெட்டுத் தகவல்களை திரட்டுவதுடன், ராஜேந்திர சோழன் கால்பதித்த இடங்களில் இருந்து பிடிமண்ணும் சேகரிக்கப் போகிறோம்.
பயணம் நிறைவடைந்த பிறகு, கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனுக்கு நினைவகம் அமைக்கத் திட்டமிட்டுள்ளோம். பயணத்தின்போது சேகரிக்கப் படும் ராஜேந்திர சோழன் காலடி மண்ணைக் கொண்டு நினைவகத் தில் பீடம் அமைக்கப்படும். அந்த பீடத்தில் ராஜேந்திரனின் மெய்கீர்த் தியானது கல்வெட்டாக வடித்து நிறுத்தப்படும்.
ராஜேந்திரன் எரியூட்டப்பட்ட காஞ்சிபுரம் மாவட்டம் பிரம்மதேசத் தில் இருந்து கலசத்தில் திருமண் எடுத்துவந்து அந்த கலசத்தையும் பீடத்தில் வைக்க இருக்கிறோம். இந்த பணிகள் அனைத்தையும் அடுத்த ஆண்டு ராஜேந்திர சோழன் பிறந்தநாளுக்குள் செய்துமுடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
நமது முன்னோரின் வரலாற்றைச் சொல்லும் அரிய கல்வெட்டுகளை எல்லாம் வெள்ளையர்கள் படியெடுத்து வைத்திருக்கின்றனர். மைசூரில் வைக்கப்பட்டுள்ள அந்த ஆவணங்களில் 1019-ம் ஆண்டு வரையிலான கல்வெட்டு தகவல்கள் மட்டுமே வெளிவந்துள்ளன. போதிய அக்கறை காட்டாததால் மற்ற ஆவணங்கள் செல்லரித் துக்கொண்டு இருக்கின்றன. அவற்றையும் வெளிக்கொண்டு வந்து பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் முயற்சி மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கோமகன் தெரிவித் தார்.