Last Updated : 22 Nov, 2013 10:49 AM

 

Published : 22 Nov 2013 10:49 AM
Last Updated : 22 Nov 2013 10:49 AM

1980-களில் பாரத ரத்னா விருது பெற்றவர்கள்

1980- அன்னை தெரசா

(1910 ஆகஸ்ட் 26 – 1997 செப்டம்பர் 5)

அல்பேனியா நாட்டைச் சேர்ந்த கத்தோலிக்க கிறிஸ்தவ கன்னியாஸ்திரீ. கொல்கத்தாவில் சமயப் பணியாற்ற வந்த அவர் பின்னாளில் “மிஷினரிஸ் ஆப் சேரிட்டி” அமைப்பை உருவாக்கி சமூக சேவைகளில் மாபெரும் சாதனை படைத்தவர்.

1983- வினோபா பாவே



(1895 செப்டம்பர் 11 – 1982 நவம்பர் 15)

சுதந்திரப் போராட்ட வீரர். ஆன்மிகத் தலைவர். பூமி தான இயக்கத்தை தொடங்கி ஏழை எளியோருக்கு நிலம் கிடைக்கச் செய்தவர். மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த அவர் மராத்தி, ஹிந்தியில் பல்வேறு ஆன்மிக நூல்களை எழுதியுள்ளார்.



1987 - கான் அப்துல் கபார் கான்



(1890 – 1988 ஜனவரி 20)



பாரத ரத்னா விருதைப் பெற்ற முதல் வெளிநாட்டுக்காரர். சுதந்திரப் போராட்டத்தின்போது இந்திய மக்களால் எல்லை காந்தி என்றழைக்கப்பட்டவர். பாகிஸ்தானின் பஸ்தூர் பழங்குடி இனத்தின் முக்கிய தலைவர்.



1988 – எம்.ஜி.ராமச்சந்திரன்

(1917 ஜனவரி 17 – 1987 டிசம்பர் 24)

தமிழ் திரைப்பட நடிகர், அ.தி.மு.க. நிறுவனத் தலைவர், தொடர்ச்சியாக 3 முறை தமிழக முதல்வராகப் பதவி வகித்தவர். அவரது மறைவுக்குப் பின் பாரத ரத்னா வழங்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x