பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் ரூ.80 ஆயிரம் கோடி கடன் வசூல்: வருமான வரித்துறை தகவல்

பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் ரூ.80 ஆயிரம் கோடி கடன் வசூல்: வருமான வரித்துறை தகவல்
Updated on
1 min read

பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட பிறகு, வங்கிக் கடன்களை பழைய ரூபாய் நோட்டுகள் மூலம் ரூ. 80,000 கோடி வரை திருப்பி செலுத்தியுள்ளனர் என்று வருமான வரித்துறை கூறியுள்ளது.

இது தொடர்பான தகவல்களை வருமான வரித்துறை நேற்று வெளியிட்டுள்ளது. அதன்படி, சுமார் 60 லட்சத்துக்கும் அதிகமான வங்கி கணக்குகளில் தலா ரூ.2 லட்சத்துக்கும் அதிகமாக பழைய ரூபாய் நோட்டுகள் நவம்பர் மாதத்துக்கு பிறகு டெபாசிட் செய்யப்பட்டுள்ளன.

நவம்பர் 8ம் தேதிக்கு பிறகு செலுத்தப்பட்ட வங்கிக் கடன்களில் ரூ.80,000 கோடி பழைய ரூபாய் நோட்டுகள் மூலம் ரொக்கமாக செலுத்தப்பட்டுள்ளன. ரூ.16,000 கோடிக்கும் அதிகமான தொகை கூட்டுறவு வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளன. சுமார் ரூ.25,000 கோடி வரை செயல்பாட்டில் இல்லாத வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களில் ரூ.10,700 கோடிக்கும் அதிக மான தொகை பல்வேறு வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட் டுள்ளன என்பது தெரியவந் துள்ளது. ரூ.16 ஆயிரம் கோடிக்கும் அதிக மான தொகை கூட்டுறவு வங்கிகளில் டெபாசிட் செய்யப் பட்டுள்ளன. இதில் குறிப்பாக ரூ.13,000 கோடி மாநில கூட்டுறவு வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளன. இந்த டெபாசிட்கள் குறித்து வருமான வரித்துறையும், அமலாக் கத்துறையும் ஆராய்ந்து வருவ தாகவும் அதிகாரிகள் குறிப்பிட்ட னர். மேலும் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள டெபாசிட் டுகள் குறித்தும் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். ரூ.2 லட்சம் முதல் 2.5 லட்சம் வரை டெபாசிட் செய்யப்பட்டுள்ள தொகை ரூ.42,000 கோடியாகும். இந்த கணக்குகளின் பான் எண், மொபைல் எண் அல்லது முகவரிகள் உள்ளவற்றின் அடிப் படையில் அடையாளம் காணப் படும். ஜன் தன் யோஜனா கணக்குகளில் டெபாசிட் செய்துள்ளவை குறித்து ஏற்கெனவே ஆய்வு செய்யப்பட் டுள்ளன என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

பான் எண் குறிப்பிடாமல் ரூ.50,000 த்துக்கு மேல் டெபாசிட் செய்யப்பட்டுள்ளவை குறித்து அரசு நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளதாகவும் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in