சூப்பர் டீலக்ஸ் படத்தில் டப்ஸ்மாஷ் புகழ் மிருணாளினி

சூப்பர் டீலக்ஸ் படத்தில் டப்ஸ்மாஷ் புகழ் மிருணாளினி
Updated on
1 min read

டப்ஸ்மாஷ் மூலம் புகழடைந்த பெங்களூருவைச் சேர்ந்த ஐடி பெண் மிருணாளினி ரவி, தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகும் 'சூப்பர் டீலக்ஸ்' படத்தில் நடிக்கிறார்.

'ஆரண்ய காண்டம்' வெளியான 6 வருடத்துக்குப் பிறகு  தியாகராஜன் குமாரராஜா இயக்கும் படம் 'சூப்பர் டீலக்ஸ்'. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். படத்தில் விஜய் சேதுபதி போட்டிருக்கும் பெண் கெட்டப் வைரல் ஹிட் ஆகியுள்ளது.

தற்போது இந்தப் படத்தில் தானும் நடித்துள்ளதாக டப்ஸ்மாஷ் மூலம் சமூக வலைதளங்களில் புகழடைந்த மிருணாளினி கூறியுள்ளார். படக்குழுவுடன் தான்  இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் மிருணாளினி பகிர்ந்துள்ளார். அவர் படத்தில் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது பற்றி இன்னும் தெரியவில்லை.

ஏற்கனவே தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், பல மேடை நிகழ்ச்சிகளிலும் இவர் பங்கெடுத்துள்ளார். ஆங்கில இதழ் ஒன்றின் அட்டைப்படத்திலும் மிருணாளினி தோன்றியுள்ளார். வரவிருக்கும் 'நகல்' என்ற திரைப்படத்திலும் இவர் நாயகியாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in