

ராஜு ஆறுமுகம் எழுதிய ‘திறன் இந்தியா… எங்கே இந்திய இளைஞர்கள்?’ கட்டுரை (06.6.22) முக்கியமான சில விஷயங்களைத் தொட்டிருக்கிறது. ஐ.டி.ஐ. எனப்படும் தொழிற்பயிற்சி நிறுவனங்களும் அவற்றின் ஆசிரியர்களும் தனியொரு உலகத்தில் வலம்வருபவர்களாகவே இருக்கிறார்கள்.
கட்டுரையில் குறிப்பிட்டிருக்கும்படி 90% ஐ.டி.ஐ. தொழிற்பயிற்சி நிறுவனங்கள் போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் அற்றவையாகவே இருக்கின்றன. ‘No worker left behind’ மாதிரியைப் பின்பற்ற வேண்டும், குடிமைப் பணிக்கான படிப்பை முடித்தவர்களையும், ஐ.ஐ.டி வல்லுநர்களையும் இணைத்துச் செயல்பட வைக்க வேண்டும் என்பது போன்ற யோசனைகள் முக்கியமானவை.
ஐ.டி.ஐ. நிறுவனங்களை ஆய்வுசெய்யச் செல்லும் அதிகாரிகள் முன்னறிவிப்பு கொடுக்காமல் திடீரென்று சென்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும். தகுதியற்ற நிறுவனங்களை மூடிவிடுவதும் நல்லது. மேலும், ‘HR துறை’ எனப்படும் மனிதவளத் துறை உருவான பின்பு, நல்ல ஊதியம், பணி நிரந்தரம் என்பதெல்லாம் பழங்கதை ஆகிவிட்டது. இது குறித்துத் தீவிர மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டத்தில் நாம் உள்ளோம்.
- அன்பு ஜெயந்தன், மின்னஞ்சல் வழியாக…
கட்டுரையின் லிங்க்: திறன் இந்தியா... எங்கே இந்திய இளைஞர்கள்?