இப்படிக்கு இவர்கள்: வழிகாட்டி மருத்துவர்!

இப்படிக்கு இவர்கள்: வழிகாட்டி மருத்துவர்!
Updated on
1 min read

மருத்துவர் கு.கணேசன் எழுதிய ‘குரங்கு அம்மை: அடுத்த அச்சுறுத்தல்!’ (27.05.22) கட்டுரையைப் படித்தேன். புதுப்புது நோய்கள் பற்றிய பீதி பரவத் தொடங்கும்போது, பீதியை முளையிலேயே கிள்ளியெறியும் வகையில், அறிவூட்டித் தெம்பூட்டும் வகையில் கு.கணேசன் செயல்படுவதற்குத் தமிழ்ச் சமூகத்தின் சார்பில் நன்றி! அவர் தரும் விழிப்புணர்வு மருத்துவர்களையும் மக்களையும் ஒருங்கே சென்றுசேர ‘இந்து தமிழ்’ நாளிதழும் வழிவகுத்துப் பெரும் சேவை செய்கிறது. மேலும், கு.கணேசனின் தமிழானது படிப்பதற்கு மிகவும் எளிமையாக இருக்கிறது.

இந்த நோய் உயிருக்கு ஆபத்தை விளைவிக்காது என்பதும் உள்ளுறுப்புகளைப் பாதிக்காது என்பதும் ‘ஐசியு’ பராமரிப்பு தேவயில்லை என்பதும் தெரிகிறது. அம்மை போல் படுத்திவிட்டுச் செல்கிறது. மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் இந்த விஷயங்களே தேவைப்படுகின்றன. அறிகுறிகளையும் நோய் பரவும் முறைகளையும் பற்றி விவரமாகவும், எளிதாகப் புரிந்துகொள்ளும்படியும் கு.கணேசன் எடுத்துரைத்திருக்கிறார். உடல்நலம் தொடர்பாகத் தமிழ்நாடு அரசுக்கும் மக்களுக்கும் மருத்துவர் கணேசன் வழிகாட்டியாகத் திகழ்கிறார்... நன்றி!

- டாக்டர் வித்யா சங்கரி, ஆத்தூர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in