

‘இன்றும் தேவை அறிஞர் குமரப்பா!’ என்கிற பாமயன் கட்டுரை, ஜே.சி. குமரப்பாவின் சிறப்பை எடுத்துரைத்தது. வெளிநாடுகளில் உயர் கல்வி பெற்றிருந்தும், இந்திய நலனில் அக்கறை கொண்டு அதற்கேற்றவாறு அரசியல் மற்றும் பொருளாதாரக் கட்டுரைகளை ஆங்கிலத்தில் எழுதினார்.
நாட்டின் பல பகுதிகளுக்கும் தன் மோட்டார் சைக்கிளிலேயே பயணம் செய்து, சுற்றிப்பார்த்து, சமூகச் சூழலை அறிந்துகொண்டார். இந்திய விவசாயச் சீர்திருத்தக் குழுவின் தலைவராக இருந்தபோது, அவர் வழங்கிய பரிந்துரைகளை அரசு ஏற்காமல் போனது வருந்தத்தக்கது.
அவை நிலவுடைமையாளர்களுக்கு எதிராக இருந்ததும் ஒரு காரணம்.
- கு. இரவிச்சந்திரன்,ஈரோடு.