

தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள புத்தக வாசிப்பு மிக அவசியம் என்று மாணவர்களிடம் எடுத்துரைத்த ஏடிஜிபி சைலேந்திர பாபுவின் செயல் பாரட்டத்தக்கது.
வாட்ஸ் அப்பிலும், ஃபேஸ்புக்கிலும் மூழ்கிக் கிடக்கும் இன்றைய இளைஞர்களின் மனநிலையை மாற்றும் சக்தி புத்தகங்களுக்கு மட்டுமே உண்டு. மேலும் புத்தக வாசிப்பு என்பது தியானத்துக்கு ஒப்பானது. இதுபோன்ற செய்திகளுக்கு முக்கியத்துவம் அளித்து வெளியிடும் ‘தி இந்து’வுக்கு நன்றி.
- ம. மீனாட்சிசுந்தரம்,சென்னை.