

மின் இணைப்பு உள்ள வீடுகளிலெல்லாம் சமையல் எரிவாயு இணைப்பு உள்ளதாக எந்தப் புள்ளிவிவரம் மத்திய அரசுக்குச் சொன்னது?
மானியமும், அரசின் உதவிகளும் சரியான மக்களைச் சென்றடைய வேண்டும்தான். ஆனால் ‘விரல்களோடு இருப்பவர்களெல்லாம் வீணை வாசிக்க தெரிந்தவர்கள்’ என்று கற்பிதம் செய்துகொள்வதற்கு இணையானது, மின் இணைப்பு உள்ள குடும்பங்களுக்கெல்லாம் மண்ணெண்ணெய் தேவைப்படாது என்று அரசு நினைத்துக்கொள்வது!
எனவே, மின் இணைப்பு உள்ள வீடுகளுக்கு மண்ணெண்ணெய் மானியத்தை ரத்துசெய்யும் எண்ணத்தை அரசு கைவிட வேண்டும்.
பாண்டி,‘தி இந்து’ இணையதளத்தில்…