

ஜம்மு-காஷ்மீர் மாநிலத் தேர்தல் முடிவுகள் அரசியல் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.
ஓமர் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டுக் கட்சி தோல்வியடையும் என்பது எதிர்பார்க்கப்பட்டதுதான். ஆனால், பாஜக 25 இடங்களில் வென்றிருப்பது நிச்சயம் எதிர்பார்த்திராதது.
அதேசமயம், பாஜக தலைவர்கள் கூறிவந்ததுபோல் அந்தக் கட்சிக்குத் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. தொங்கு சட்டசபை அமைய வாய்ப்பு இருப்பதாகவே கூறப்படுகிறது.
தேர்தல் முடிவுகள் மக்களின் மன ஓட்டத்தைப் பிரதிபலிப்பவை. அரசியல் கட்சிகள் இதை உணர்ந்து, அம்மாநிலத்தில் அமைதி நிலவும் வகையிலான ஆட்சியைத் தர முன்வர வேண்டும்.
- சி. முத்துக்குமரன்,திருச்சி.