

‘இன்னொரு இந்தியா’ தொடர் ஆரம்பமே விறுவிறுப்பாக உள்ளது. இந்தியாவின் அமைதி முகத்துக்கும், ஆக்ரோஷமான முகத்துக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. மாவோயிஸ்ட்டுகள் ஏழை பழங்குடியின மக்களுக்கு நன்மை செய்வதாகச் சொல்லிக் கொண்டு, பாதுகாப்புப் படையினரின் மீதும் அப்பாவிப் பொதுமக்கள்மீதும் தாக்குதல் நடத்துகிறார்கள். பாதுகாப்புப் படையினரோ பொதுமக்களிடையே மாவோயிஸ்ட்டுகளும் இருப்பதாகச் சந்தேகிக்கிறார்கள். இரண்டு தரப்புக்கும் இடையே மாட்டிக்கொண்டு விழிப்பது பழங்குடி மக்கள்தான்.
- ஜீவன்.பி.கே.,கும்பகோணம்.