

‘எங்கள் குழந்தைகள், அவர்கள் குழந்தைகள்’ கட்டுரை படித்தேன். இந்தியாவில் கல்வியில் பாகுபாடு காரணமாக, பணக்காரக் குழந்தைகள் நல்ல கல்வி நிறுவனங்களில் படித்து நல்ல வேலைகளுக்குச் செல்வதும், ஏழைக் குழந்தைகள் சுமாரான பள்ளியில் படிப்பதால், போட்டிகளை எதிர்கொள்ள இயலாமல்போவதும் சமூக நீதி ஆகாது. உயர் கல்வியில் மட்டுமல்ல, ஆரம்பக் கல்வியில்கூட மாற்றங்கள் வேண்டும்.
- எம்.ஆர். லட்சுமிநாராயணன்,கள்ளக்குறிச்சி.