

சீனாவில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்பவர்கள் எண்ணிக்கை 8 கோடி என்ற செய்தி படித்தேன். 135 கோடி மக்களைக் கொண்டுள்ள சீனாவில், வெறும் 8 கோடிப் பேர்தான் வறுமைக்கோட்டுக்குக்கீழ் இருக்கிறார்கள் என்பது நமக்குப் பல செய்திகளைத் தருகிறது. ஒருநாள் வருமானம் 60 ரூபாய் என்று நிர்ணயித்திருக்கிறார்கள்.
60 ரூபாய்க்கு இந்தியாவில் வாங்குவதைவிட சீனாவில் அதிகமாகவே பொருட்களை வாங்க முடியும். இந்திய அளவீட்டுப்படி பார்த்தால், சீனாவில் வறுமையில் வாடுபவர்களின் எண்ணிக்கை இன்னும் குறைவாகவே இருக்கும். திட்டமிடல் என்பது அந்நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கிறது.
இந்நிலையில்தான் திட்டக்குழுவே வேண்டாம் என்று சொல்கிற அரசு மத்தியில் ஆட்சியில் அமர்ந்திருக்கிறது. சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சிகள், ஊடகங்கள் இதற்கான விவாதங்களை நடத்த வேண்டிய நேரமிது.
- கணேஷ்,கோவை.