எழுத்துப் பட்டறை

எழுத்துப் பட்டறை
Updated on
1 min read

'கலை இலக்கியம்’ பகுதியில் ஜெயமோகனின் நேர்காணல் படித்தேன். ஓர் எழுத்தாளருக்கே உரிய செம்மாந்த தொனியில் அவரது நேர்காணல் அமைந்திருந்தது. ஓர் எழுத்தாளர் எழுத்தையே தொழிலாகக் கொண்டு பிழைப்பது, சாத்தியமில்லாத ஒன்றாகவே எப்போதும் இருந்துவந்துள்ளது. இன்றைக்கு எழுத்தாளர்கள் சினிமாவுக்குக் கதை எழுதி ஓரளவு வசதியாக இருந்தபோதிலும், நிறைய எழுத்தாளர்களின் நிலை சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை.

ஓர் எழுத்தாளர் எழுதிய நூல், குறைந்தது வருடத்துக்கு ஐநூறு படிகளேனும் விற்பனையாக வேண்டும். ஆனால், இங்கு ஆயிரம் படிகள் விற்பனையாகவே ஐந்து வருடங்களாகின்றன. ஏதேனும் ஒரு தொழில் செய்துகொண்டு எழுத்தையும் ஒரு ஆத்மார்த்த நடவடிக்கையாக வைத்துக் கொள்வதில் எழுத்தாளர்களுக்கு உள்ளபடியே பெருமைதான். பிழைக்க எதுவுமில்லை... எழுத்துதான் ஒரே தொழில் என்பது ஓர் எழுத்தாளனைச் சமூகத்தினின்றும் வேறுபடுத்திவிடும்.

– கே எஸ் முகமத் ஷூஐப். காயல்பட்டினம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in