

‘ஆசிரியர்களே, என்ன செய்யப்போகிறீர்கள்?’ என்று தன்னுடைய கட்டுரையில் மிகுந்த ஆதங்கத்துடன் பி.ஏ.கிருஷ்ணன் கேட்டுள்ளார். புத்தகங்களிடமிருந்தும், படிக்கும் பழக்கத்திலிருந்தும் விலகி நிற்கும் ஆசியர்களின் பலவீனங்களை சரியாகச் சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால், உயர் கல்வியின் இன்றைய நிலைமை அவர் நினைப்பதைவிடவும் மோசமாக இருக்கிறது. தமிழகத்தில் சுயநிதிக் கல்லூரிகள் மற்றும் வகுப்புகளின் வருகைக்குப் பின்னர், அரசுப் பள்ளி, கல்லூரி நிர்வாகங்களின் போக்கு முற்றிலும் மாறிவிட்டது. இவர்களிடம் மாணவர் நலனில் நாட்டமோ, உயர்கல்வியில் அக்கறையோ இருப்பதில்லை. தமிழ்நாட்டின் உயர்கல்வி ஏற்றம் பெற, புரையோடிப்போயிருக்கும் சாதி, கட்சி அரசியல் மற்றும் லஞ்ச லாவண்யம் போன்றவை எல்லாம் களையப்பட வேண்டும்.
- பேரா.பெ. விஜயகுமார், முன்னாள் பொதுச் செயலாளர், மூட்டா. மதுரை-18.