

மேற்காசியப் போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், வெளிநாட்டுச் செலாவணியைச் சேமிக்கவும், நாட்டின் நலன் கருதியும், மக்களுக்கும் நிறுவனங்களுக்கும் பிரதமர் மோடி முன்வைத்திருக்கும் யோசனைகளும் வேண்டுகோள்களும் விவாதப் பொருள் ஆகியிருக்கின்றன.
ஈரான் போர் மேற்காசியாவைத் தாண்டி இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஏப்ரல் 8இல் ஒருவழியாக அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் கையெழுத்தான தற்காலிகப் போர் நிறுத்த ஒப்பந்தம் பின்னடைவைச் சந்தித்துள்ளது.
இந்தச் சூழலில், முழுமையான போர் நிறுத்தம் உருவாவதற்கான சாத்தியம் குறைவு என்றே தெரிகிறது. 40-க்கும் மேற்பட்ட இந்தியச் சரக்குக் கப்பல்கள் இன்னும் ஹார்முஸ் நீரிணையைக் கடக்க முடியாத சூழல் நிலவுகிறது.
கச்சா எண்ணெய்த் தேவையில் 87 சதவீதத்துக்கு இறக்குமதியைச் சார்ந்தே இந்தியா இருக்கும் நிலையில், இந்தச் சூழல் பல்வேறு சவால்களை உருவாக்கி இருக்கிறது.
இந்நிலையில், அடுத்த ஓர் ஆண்டுக்குத் தங்க நகைகள் வாங்குவதைத் தவிர்க்குமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.