மறுபயன்பாட்டுக்கு உகந்த ஏவூர்தி: விண்வெளிக் கனவு வெல்லட்டும்!

மறுபயன்பாட்டுக்கு உகந்த ஏவூர்தி: விண்வெளிக் கனவு வெல்லட்டும்!
Updated on: 
2 min read

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அண்மையில் செலுத்திய ஸ்டார்ஷிப் ஏவூர்தியின் (ராக்கெட்) மேல்பாகம் பூமியில் முதன்முதலாகத் திரும்பப் பெறப்பட்டுள்ளது. மீண்டும் பயன்படுத்தத் தகுந்த, அதிக எடை தாங்கும் ஏவூர்தி வேண்டும் என்கிற நெடுங்கால முயற்சியில் இது ஒரு முக்கியமான கட்டம்.

செயற்கைக்கோள்களை விண்வெளிக்குச் சுமந்துசெல்லும் ஏவூர்திகள் ஒருமுறை மட்டுமே பயன்படக்கூடியவையாகத்தான் இருந்தன. முதன்மைப் பாகங்களான பூஸ்டர் (முதல் கட்டம்), மேல்பாகம் (இரண்டாவது கட்டம்) ஆகியவை செயல்பாட்டின் ஊடாக அழிந்துவிடும். ஏவூர்தியை ஏவுதளத்திலிருந்து உந்தித்தள்ளி, பூமியைச் சுற்றியிருக்கும் அதிகச் செறிவு கொண்ட வளிமண்டலத்தைக் கடக்க பூஸ்டர் உதவுகிறது.

பூஸ்டர் எரிந்து கீழே விழுந்தவுடன், மேல்பாகம் ஏவூர்தியைத் தொடர்ந்து பறக்க வைக்கும். இந்த இரண்டு பாகங்களையும் தயாரிக்க அதிக வன்பொருள்கள் தேவை; செலவும் மிக அதிகம். இந்தச் சூழலில், எலான் மஸ்க்கின் `ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனம், மறு பயன்பாட்டுக்கு உகந்த ஏவூர்தியை உருவாக்கும் பணியில் இறங்கியது. 2010இல் ‘ஃபால்கன் 9’ என்கிற ஏவூர்தியை இந்த நிறுவனம் வெற்றிகரமாகச் செலுத்தியது.

இது 20 டன் எடை தாங்கும். பல முயற்சிகளைத் தொடர்ந்து மிக அதிக எடை தாங்கும் ‘ஸ்டார்ஷிப்’பை இந்த நிறுவனம் உருவாக்கியது. ஸ்டார்ஷிப் 200 டன் எடை சுமக்கும். விண்வெளியில் இருக்கும்போதே எரிபொருளை ஒரு வாகனத்தில் இருந்து இன்னொன்றுக்கு மாற்றுவது, நிலவு, செவ்வாய்க்குப் பயணங்கள் ஆகியவையும் ஸ்டார்ஷிப்பின் குறிக்கோள்கள்.

Loading content, please wait...

X