அண்ணாமலை பல்கலைக்கழகச் சிக்கலுக்குத் தீர்வு வேண்டும்!

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
2 min read

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் பணியாளர்களும் ஓய்வூதியர்களும் 22 நாள்களாகப் பல்கலைக்கழக வளாகத்தில் நடத்திவரும் முற்றுகைப் போராட்டம் கவலை அளிக்கிறது. ஓய்வூதியம், பதவி உயர்வு, தகுதியுள்ள அடிப்படைப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்வது முதலான கோரிக்கைகளுக்காக இவர்களது போராட்டம் நெடுங்காலமாகத் தொடர்வது அனைத்துத் தரப்பையும் பாதிக்கக்கூடியது.

1929இல் சிதம்பரத்தில் சர். அண்ணாமலை தொடங்கிய இப்பல்கலைக்கழகம் ஒரு முன்னுதாரணமான கல்வி நிறுவனமாக விளங்கியது. 1990களின் பிற்பகுதியிலிருந்துஇதன் நிர்வாகத்தில் பல சிக்கல்கள் ஏற்பட்டன.

அரசு வரையறுத்ததைக் காட்டிலும், அதிக எண்ணிக்கையில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டது விமர்சனங்களுக்கு வழிவகுத்தது. பல்கலைக்கழகத்துக்குக் கணிசமான வருவாய் ஈட்டித்தந்த தொலைநிலைக் கல்வி இயக்ககம், 2000ஆம் ஆண்டுக்குப் பிறகு தேசிய அளவிலான போட்டி காரணமாக நஷ்டத்தை எதிர்கொண்டது.

தொலைநிலைக் கல்வி இயக்கக நிதியிலிருந்து தொடங்கப்பட்ட ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி - மருத்துவமனைக்கான செலவுகளும் பல்கலைக்கழகத்தின் நிதிச்சுமையை அதிகரித்ததாகக் கூறப்படுகிறது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in