காடு வளர்ப்பில் பற்றாக்குறை: சுற்றுச்சூழலுக்குப் பேராபத்து

காடு வளர்ப்பில் பற்றாக்குறை: சுற்றுச்சூழலுக்குப் பேராபத்து
Updated on
2 min read

இந்தியக் காடுகளின் பரப்பை அதிகரிப்பதற்கான பசுமை இந்தியா தேசிய இயக்கத்தின் இலக்கில் கடந்த 10 ஆண்டுகளில் 98% பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக மத்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (சிஏஜி) அறிக்கை வெளிவந்திருப்பது அதிர்ச்சியும் கவலையும் அளிக்கிறது.

காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த 2015 டிசம்பர் 12இல் சர்வதேசக் காலநிலை ஒப்பந்தமான பாரிஸ் உடன்படிக்கை ஏற்கப்பட்டது. இதில் 2030க்குள் 250 முதல் 300 கோடி டன் கார்பன் டைஆக்சைடுக்கு இணையான ‘கார்பனை உறிஞ்சும் நிலை’(Carbon sink) உருவாக்கப்படும் என இந்தியா உறுதியளித்திருந்தது.

இதன்படி மத்திய அரசின் பசுமை இந்தியா இயக்கத்தின் செயல் திட்டத்தின்கீழ் காடுகள், காடுகள் அல்லாத பகுதிகளில் மரக்கன்றுகளை நடுவதன் மூலம் நாட்டின் காட்டுப் பகுதியைப் பாதுகாத்தல், மீட்டெடுத்தல், மேம்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளைத் தீவிரமாக முன்னெடுக்க முடிவெடுக்கப்பட்டது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in