கழிவுநீர்த் தொட்டி மரணங்கள்: முற்றுப்புள்ளி எப்போது?

கழிவுநீர்த் தொட்டி மரணங்கள்: முற்றுப்புள்ளி எப்போது?
Updated on: 
2 min read

தேசிய அளவில், 2016-26 காலக்கட்டத்தில் நிகழ்ந்த கழிவுநீர்த் தொட்டி மரணங்களின் பட்டியலில், முதல் இடத்தில் மகாராஷ்டிரத்துடன் தமிழ்நாடும் இருப்பதாகத் தூய்மைப் பணியாளர்களுக்கான தேசிய ஆணையத்தின் அறிக்கை தெரிவித்திருப்பது வேதனை அளிக்கிறது.

மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் செயல் கொடியது எனத் தீர்மானித்து, அதைத் தடைசெய்யும் சட்டம் இந்தியாவில் பிறப்பிக்கப்பட்டுக் கால் நூற்றாண்டு கடந்துவிட்டது.

கழிப்பறைகளில் மட்டுமன்றித் திறந்த சாக்கடைகள், குழிகள், ரயில் தண்டவாளங்கள் முதலான இடங்களில் மனிதக் கழிவுகளை மனிதர்கள் தங்கள் கைகளால் சுத்தம் செய்தல், சுமந்து சென்று அகற்றுதல் போன்றவற்றுக்கும் 2013இல் தடை விதிக்கப்பட்டது.

இவற்றைச் செய்ய நிர்ப்பந்திப்பவர்கள் பிணையில் வெளிவர முடியாத குற்றம் இழைத்ததாகக் கருதப்படுவார்கள் எனவும் இச்சட்டம் அறிவித்தது.

இத்தனைக்குப் பிறகும், பாதுகாப்புக் கருவிகள் இன்றித் தொழிலாளர்களைச் சாக்கடை சுத்தம் செய்யப் பணியமர்த்தும் போக்கு ஒழியவில்லை.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in