ரியாத் விமான நிலையத் தாக்குதல்: போர்ப் பதற்றம் தணியட்டும்

ரியாத் விமான நிலையத் தாக்குதல்: போர்ப் பதற்றம் தணியட்டும்
Updated on: 
2 min read

சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையம் மீது, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதல்களில் 14 பேர் உயிரிழந்த சம்பவம், மேற்காசியாவில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அணு ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பது தொடர்பாக ஈரானுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்திவந்த நிலையில், 2026 பிப்ரவரியில் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கியது, மேற்காசியாவில் போர்ச் சூழலுக்கு வழிவகுத்தது.

இதற்குப் பதிலடியாக, அமெரிக்காவுடன் நட்பைப் பேணும் வளைகுடா நாடுகளின் ராணுவத் தளங்கள் மீது ஈரான் நடத்திய பதிலடித் தாக்குதல், ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதால் கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்ட முடக்கம் எனப் பல்வேறு பிரச்சினைகள் உலகின் பெரும்பாலான பகுதிகளில் எதிரொலித்தன.

ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதல்கள் குறைந்திருந்த நிலையில், ஏமன் நாட்டைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம் மீது அக்டோபர் 6 முதல் 12 வரை ஏவுகணை, ட்ரோன் மூலம் தாக்குதல்களை நடத்தினர்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in