உடன் பயணிப்போரின் பாதிப்புகளும் இழப்பீட்டுக்கு உரியவையே!

உடன் பயணிப்போரின் பாதிப்புகளும் இழப்பீட்டுக்கு உரியவையே!
Updated on
2 min read

இருசக்கர வாகனங்களில் பின் இருக்கையில் பயணிப்பவர்களுக்கு, விபத்து தொடர்பான காப்பீடு வழங்கும் பொறுப்பிலிருந்து காப்பீட்டு நிறுவனங்கள் விலக முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு வரவேற்கத்தக்கது.

2020இல் தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனத்தில் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றவரும் அவரோடு பயணித்த ரஹமத்துல்லா என்பவரும் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.

ஒரு தனியார் நிறுவனத்தின் இருசக்கர வாகனங்களுக்கான விரிவான காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் (பண்டுல்டு பாலிசி) அந்த வாகனம் காப்பீடு செய்யப்பட்டிருந்தது.

வாகனத்தின் சேதாரங்களுக்கான இழப்பீடும் விபத்தால் சாலையில் காயம் அடையச் சாத்தியம் உள்ள மூன்றாம் தரப்பின் உயிர், உடல், உடைமை சார்ந்த சேதாரங்களுக்கான இழப்பீடும் இதன்மூலம் கிடைக்கும்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in