

ஒரு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நாளில் இருந்து மூன்று மாதங்களுக்குள் உயர் நீதிமன்றங்கள் தீர்ப்பை அறிவிக்க வேண்டும் எனவும், தீர்ப்பு குறித்த விவரங்களை 24 மணி நேரத்துக்குள் இணையத்தில் பதிவேற்றியிருக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருப்பது வரவேற்கத்தக்கது.
2014இல் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மூவருக்கு ஆயுள் தண்டனை விதித்து விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் ஒருவருக்கு 2018இல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இவர்கள் நால்வரும் 10 ஆண்டுகளுக்கு மேலாக விசாரணைக் காவலிலேயே (விசாரணைக்கான காத்திருப்பு உள்பட) கழித்துவிட்டதாக ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
விசாரணை முடிந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு 2022இல் ஒத்திவைக்கப்பட்டது. நான்கு ஆண்டுகளைக் கடந்தும் தீர்ப்பு வழங்கப்படாத நிலையில் நால்வரும் உச்ச நீதிமன்றத்தை அணுகினர்.
அதன் மீதான தீர்ப்பில்தான், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட வழக்குகளில் மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அறிவிக்கப்பட வேண்டும் என உயர் நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.