ஆனைக்கட்டி ரிசார்ட்கள்: அரசின் உறுதி அவசியம்

ஆனைக்கட்டி ரிசார்ட்கள்: அரசின் உறுதி அவசியம்
Updated on: 
2 min read

யானை வழித்தடங்களில் ஒன்றான ஆனைக்கட்டியில் முறையான அனுமதி இல்லாமல் செயல்பட்டுவந்த 13 ரிசார்ட்கள் அண்மையில் மூடப்பட்ட நிலையில், அவை வணிகம் அல்லது வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படாததை உறுதிசெய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

யானைகளைப் பாதுகாப்பதற்கும் ஆனைக்கட்டி ரிசார்ட்களை ஒழுங்குபடுத்து வதற்குமான தொடர்ச்சியான நீதிமன்ற வழிகாட்டல்கள் வரவேற்கத்தக்கவை. தமிழக அரசால் யானை வழித்தடங்களாக அறிவிக்கப்பட்டுள்ள 42 இடங்களில் ஆனைக்கட்டியும் ஒன்று.

இங்கு பல ரிசார்ட்கள் முறையான அனுமதியின்றிக் கட்டப்பட்டுள்ளதாகவும் யானைகளின் நடமாட்டத்துக்குத் தடை ஏற்படுத்துவதாகவும் சூழலியல் ஆர்வலர்கள் முறையிட்டு வருகின்றனர்.

குறிப்பாக, ரிசார்ட்கள் அமைத்துள்ள மின் வேலிகளால் மின்சாரம் தாக்கி யானைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. மின் வேலிகளால் தங்கள் பாதையை இழக்கும் யானைகள் மக்கள் குடியிருப்புக்குள் வருவதால் யானை - மனிதர் எதிர்கொள்ளல் சம்பவங்களும் அதிகரிக்கின்றன.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in