பாதசாரிகளின் அடிப்படை உரிமை நடைபாதைகள்!

பாதசாரிகளின் அடிப்படை உரிமை நடைபாதைகள்!
Updated on
2 min read

சாலைகளில் வரையறுக்கப்பட்ட நடைபாதைகளில் நடப்பது பாதசாரிகளின் அடிப்படை உரிமை எனவும், வாகனங்களின் சாலைப் பயன்பாட்டைவிட இது முக்கியத்துவம் வாய்ந்தது எனவும் உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு, பாதசாரிகளின் நலனைக் காப்பதாக உள்ளது.

பாதசாரிகளின் இந்த உரிமையை உறுதிப்படுத்தும் விதத்தில் சட்டம் இயற்றும்படி மத்திய அரசிடம் நீதிமன்றம் கூறியிருப்பதும் நம்பிக்கை அளிக்கிறது.

கேரளத்தில், பள்ளிக்குச் செல்வதற்காகத் தன் தந்தையோடு சாலையில் நடந்து சென்ற ஐந்து வயதுச் சிறுவன் மீது டிரக் மோதியதில் உயிரிழந்ததை அடுத்து அவரது தந்தைக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று வாகன விபத்து இழப்பீட்டுத் தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது.

இதை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், இழப்பீட்டுத் தொகையைக் குறைத்துத் தீர்ப்பளிக்கப்பட்டது.

இதை எதிர்த்துச் சிறுவனின் தந்தை உச்ச நீதிமன்றத்தை நாடிய நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, அதுல் எஸ்.சந்துர்கர் அடங்கிய இருவர் அமர்வு கேரள உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்ததோடு, இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி வழங்கவும் உத்தரவிட்டது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in