கோயிலில் வணிக வளாகம்: சட்டம் மதிக்கப்படட்டும்

கோயிலில் வணிக வளாகம்: சட்டம் மதிக்கப்படட்டும்
Updated on
2 min read

கோயில்களுக்குச் சொந்தமான இடத்தில் திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் கட்டுவதற்கு முன்பு அளிக்கப்பட்டிருந்த நிர்வாக அனுமதியை இந்து சமய அறநிலையத் துறை அண்மையில் ரத்து செய்திருப்பது வரவேற்கத்தக்கது.

சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.விஸ்வநாத் அர்லேகர் அண்மையில் வாசித்த உரையில், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டமைப்பில் அரசு மாற்றங்கள் கொண்டுவர இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதன் தொடர்ச்சியாக அறநிலையத் துறை அமைச்சர் சீ.ரமேஷ், முந்தைய திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட வணிகரீதியான, இன்னும் தொடங்கப்படாத 46 கட்டுமானத் திட்டங்களுக்கான அனுமதியை ரத்து செய்வதாக அறிவித்தார்.

ரூ.246 கோடி மதிப்பீட்டில், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் முதலான 17 கோயில்களுக்கு அருகே வணிக வளாகங்கள், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் முதலான 29 கோயில்களுக்கு அருகே திருமண மண்டபங்கள் கட்ட அறநிலையத் துறை முன்பு அனுமதி அளித்திருந்தது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in