பெண்களின் பாதுகாப்புக்கு 24 மணி நேரக் கண்காணிப்பு அவசியம்

பெண்களின் பாதுகாப்புக்கு 24 மணி நேரக் கண்காணிப்பு அவசியம்
Updated on: 
2 min read

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடைபெறச் சாத்தியமுள்ள இடங்களில் 24 மணி நேரக் கண்காணிப்பு மையங்களை அமைக்கும்படி டெல்லி காவல் துறையினருக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருப்பது வரவேற்கத்தக்கது. டெல்லியில் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களிலும் இதை அமல்படுத்துவது பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக அமையும்.

செப்டம்பர் மாதம் டெல்லியில் 17 வயதுப் பெண் ஒருவரை, காவலர்கள் போல வேடமிட்ட மூன்று பேர் மிரட்டி, ஒரு பூங்காவுக்குக் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கினர்.

இதைக் கண்டித்தும் பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் டெல்லியில் பேரணி நடத்தினர். தலைநகர் டெல்லியில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் குறித்து உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவுசெய்தது.

அண்மையில் நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, கே.வினோத் சந்திரன் அடங்கிய அமர்வின் முன் அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. “பொது இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்துவதால் குற்றவாளிகளை அடையாளம் காண முடியுமே தவிர, குற்றச் செயல்களைத் தடுக்க முடியாது” எனக் குறிப்பிட்ட நீதிபதிகள் கல்வி நிலையங்கள், பொது இடங்களில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தும்படி உத்தரவிட்டனர்.

காவல் துறையினரின் கண்காணிப்பில் போதாமை இருப்பதை சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஒப்புக்கொண்டார். டெல்லியில் நூற்றுக்கணக்கான சட்டவிரோத உணவகங்கள் இருப்பதாகவும் சமூக விரோதக் கும்பல்கள் கூடும் இடமாக அவை இருப்பதாகவும் நீதிபதிகள் கூறியிருப்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in