

தெருநாய்கள் மேலாண்மை, கட்டுப்பாட்டுத் திட்டங்கள் குறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்வது தொடர்பாகத் தமிழ்நாடு உள்பட 25 மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் இன்று (நவம்பர் 3) கட்டாயம் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. காணொளி வழியே ஆஜராகலாமா என்று சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கோரிய நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து, தமிழக அரசு விரிவான பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்திருக்கிறது.
கடந்த ஜூலை மாதம் டெல்லியில் சாவி சர்மா என்னும் சிறுமி தெருநாய் கடித்து உயிரிழந்தார். நாய்க்கடியால் நிகழ்ந்த இதுபோன்ற மரணங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப் பதிவுசெய்தது. கடந்த வார அமர்வின்போது மேற்கு வங்கம், தெலங்கானா, டெல்லி மாநகராட்சி ஆகியன மட்டுமே இதுதொடர்பாக விளக்கமளித்த நிலையில், இந்தக் கண்டிப்புக் குரலை உச்ச நீதிமன்றம் எழுப்பியுள்ளது. நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வு, “தொடர்ச்சியான தெரு நாய்க்கடி சம்பவங்கள் வெளிநாடுகளின் பார்வையில் இந்தியாவின் மதிப்பைக் குறைப்பதாக உள்ளன.