

70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரின் வீடுகளுக்கே சென்று நியாயவிலைக் கடைப் பொருட்களை விநியோகம் செய்யும் வகையில் ‘முதலமைச்சரின் தாயுமானவர் திட்ட’த்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்திருப்பது பாராட்டுக்குரியது. சிறப்புக் கவனம் தேவைப்படுவோரின் வாழ்வை மேம்படுத்துவதுடன் உணவுப் பாதுகாப்பையும் இந்தத் திட்டம் உறுதிசெய்யும் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது சில கட்சிகளின் வாக்குறுதிகளில் ஒன்றாக, ‘வீடு தேடி ரேஷன் திட்ட’மும் இடம்பெற்றிருந்தது. மக்கள் நல நோக்கிலான இந்த வாக்குறுதி மக்களின் கவனத்தை ஈர்த்தது. தற்போது இந்தத் திட்டத்தைத் தமிழக அரசு செயல்படுத்தத் தொடங்கியிருப்பது பாராட்டுக்குரியது.