

தமிழ்நாட்டில் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த உத்தரவுக்குத் தடை கோரிய மேல் முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
பொது இடங்களில் கொடிக்கம்பங்கள் வைக்கப்படுவதால் மக்களுக்கு ஏற்படும் இடையூறுகளை மனதில் கொண்டு நீதிமன்றம் பிறப்பித்துள்ள இந்த உத்தரவு பின்பற்றப்படுவதை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.