

சென்னை புறநகர்ப் பகுதிகளில் மினி பஸ் (சிற்றுந்து) சேவையில் தனியாரை ஈடுபடுத்த முடிவெடுத்திருக்கும் தமிழக அரசு, ‘பசுமை வாகனம்’ எனப்படும் மின்வாகனச் சேவையைத் தனியாருக்கு வழங்க முடிவெடுத்திருக்கிறது. சென்னை புறநகரின் உள்பகுதிகளில் மக்களுக்குப் பேருந்து சேவையின் தேவை அதிகரித்துள்ள நிலையில், அரசின் இந்த முடிவை நடைமுறை சார்ந்து அணுக வேண்டும்.
பிற மாவட்டங்களில் தனியார் மினி பஸ்கள் இயக்கப்பட்டபோதும், சென்னையில் வருவாயைக் கருத்தில்கொண்டு தனியாருக்கு அரசு அனுமதி அளிக்காமலிருந்தது. 2013இல் அதிமுக ஆட்சியின்போது, சென்னையில் முதல் முறையாக மினி பஸ்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.